பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புள்ளும் சிலம்பின காண்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம்

கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்

யோகிகளும், மெள்ள எழுந்தங் கரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

இதுகாறும் சொல்லப்பெற்ற ஐந்து திருப்பாசுரங்களால் பாவை நோன்பு நோற்க மார்கழி நீராடலுக்கு வாருங்கள் என்று அழைத்ததனை யும், பனி நீராடலின் உட்பொருளையும், நோன்பிற்குச் செய்யும் கிரிசைகளையும், நாடு செழிக்க மழை வேண்டும் திறத்தினையும், பத்மநாபனின் திருக்கோல மேன்மையினையும், செய்த பாவங்களை வேரோடு அறுக்கும் பெற்றி வாய்ந்த திருமாலின் திருநாமப் பெருமையினையும் கண்டோம்.

ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை ‘அமைந்துள்ள பத்துப் பாசுரங்களால் முற்பட எழுந்துவிட்ட பெண்கள் இன்னும் துயிலில் இருந்து எழாத பெண்களை எழுப்பும் காட்சியினைக் காண இருக்கின்றோம். எனவே இந்தப் பத்துப் பாசுரங்களையும், துயில் எழுப்பும் பாசுரங்கள் - பள்ளியெழுச்சிப் பாடல்கள் எனலாம். சங்ககாலத்தே அரசர் பெருமக்களுக்குப் பள்ளியெழுச்சி பாடித் துயில் உணர்த்துவது உண்டு. மாணிக்கவாசகர் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடினார். திருமாலுக்குத் தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி