உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 町阿伊

இவ்விழாவில் பறை கொட்டினர்; சங்கு ஒலித்தனர்; பல்லாண்டு இசைத்தனர்; விளக்கு, கொடி, விதானம் அமைத்து அப் பாவைக்களத்தைச் சிறப்பித்தனர். இவை எல்லா விழாக்களிலும் மேற்கொள்பவையே.

இவ்விழாவுக்குப் பறையைக் கண்ணனிடம் கேட்டுப் பெறுவதாகக் கூறுவது புதுமை. அவனைப் பாடி இதனைப் பரிசிலாகத் தருமாறு வேண்டுகின்றனர். அவனைப் பாடு வதற்கு இதனை ஓர் வாய்ப்பாகக் கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே இது ஒரு பாமாலையாக அமைந்து விடுகிறது.

ஆசிரியர் அறிமுகம்

பூரீவில்லிபுத்துரில் வாழ்ந்த விஷ்ணு சித்தர் என்னும் நாமம் கொண்ட பெரியாழ்வாரின் திருமகள் ஆண்டாள். பெரியாழ்வார் பாடிய பாடல்கள் 1. திருப்பல்லாண்டு’ 2. பெரியாழ்வார் திருமொழி என்பன ஆகும். அவர் இறைவனுக்கு மலர்மாலை சார்த்தும் திருப்பணியை மேற் கொண்டிருந்தார். அவரைப் பட்டர் பிரான்' என்று பாண்டிய மன்னன் பாராட்டி அவர் புலமையைச் சிறப் பித்தார். பூரீவில்லிபுத்துாருக்குப் புதுவை என்ற பெயரும் வழங்கியது.

இறைவனுக்குச் சூட்டும் பூமாலையை முதலில் தாம் சூடி நிலைக்கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து இவை திருமாலுக்கு அணிவிப்பதற்கு ஏற்றவை என்று முடிவு செய்தே ஆண்டாள் அனுப்புவர்; அதனால் இவர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' எனப் பாராட்டப் பெற்றுள்ளார். திருப்பாவை என்னும் பாடல் தொகுதிக்கு முன்னால் தனியன்கள்' என்ற தலைப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அப்பாடல்களின் சிறப்பையும், ஆண்டாள் வாழ்க்கைக் குறிப்பினையும் தருகின்றன. அவை பாயிரம் எனக் கூறலாம்.