உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 19

21. நந்தனின் மகனே! விழித்து எழுக;

22.

23.

24

பகைவர்கள் தோற்று உன்னைச் சரண் அடைவதைப்போல் யாம் வந்து உன்னைச் சரண் அடைகிறோம்; போற்றிப் புகழ யாம் வந்திருக்கிறோம்.

பகை அரசர் தம் ஆணவம் அடங்கி உன் பள்ளிக்கட்டிலில் நீ எழும்வரை காத்துக் கிடப்பதைப்போல யாமும் வந்து கூடியுள்ளோம்; உன் அருட்பார்வை எம்மேல் விழியாதோ? எங்கள்

தீவினைகள் தீர்ந்து போகும்.

மழைக் காலத்தில் மலைக் குகைகளில் உறங்கி எழும் சிங்கத்தைப் போல நீ துயிலிலிருந்து எழுந்துவந்து சிம்மாசனத்தில் அமர்க; யாம் வந்த காரியம் கேட்டு அருள் செய்க.

அன்று இந்த உலகம் அளந்தாய்; உன் திருவடிகளைப் போற்றி வணங்குகிறோம். தென்னிலங்கையில் வெற்றி பெற்ற உன் வலிமையை வாழ்த்துகிறோம்; சகடம் உதைத்தாய் அப்புகழைப் பேசுகின்றோம். கன்றினைக் குறுந்தடியாய்க் கொண்டு விளவின் மீது வீசிக் கனிகளை உதிர்த்தாய்; உன் ஆற்றலை மதிக்கிறோம்.