உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 57

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே-மிகுதியும் குளிர் உண்டாகும்படி-குடைந்து நீராடாமல். பள்ளிக் கிடத்தியோ-படுக்கையில் கிடப்பாயோ! பாவாய்- பாவை போன்ற பெண்ணே! நீ நன்னாளால்-நீ இந்த நல்ல நாளில் (ஆல்-அசை) கள்ளம் தவிர்ந்து-ஒதுங்கி இருத்தலை நீங்கி கலந்து-எங்களோடு கலந்து நீராட வருக.

தொகுப்புரை

கொக்கு வடிவில் வந்த பகனையும், இராவணனையும் வென்ற பெருமானின் புகழைப்பாடிச் சென்று இளங்கன்னியர் அனைவரும் பாவையை வழிபடும் களத்தை அடைந்து விட்டனர். வெள்ளியாகிய சுக்கிரன் தோன்றி விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கூட்டாக ஒலி செய் கின்றன. செவ்வரி பரந்து மலர்ச்சி உடைய கண்களை உடையவளே! உடம்பு சில்லிடக் குடைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பாயோ!

பாவையே இந்த நல்ல நாளில் ஒதுங்கித் தனித்து இருப் பதைத் தவிர்த்து எங்களோடு கலந்து நீராட வருக. விளக்கவுரை

பொல்லா- தீமைகள் செய்யும் கொடிய, தீய

கிள்ளிக்களைந்தது- சிரசினை அறுத்து அரக்கனை

ஒழித்தது.

கையால் எளிதாகக் கிள்ளியது- மிகவும் எளிமையாக அவனைக் கொன்று விட்டான் என்பதைக் கிள்ளி என்ற சொல்லாலும், அத் தீமை நீங்கி விட்டது என்பதைக் களை தல் என்ற சொல்லாலும் உணர்த்தியமை காண்க.

தி-5