உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

ஆண்டாள் இது இயற்பெயரா காரனப் பெயரா தெரியாது; நாச்சியார் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இப்பெயராலேயே அந்தப் பாடற்பகுதி பெயரிடப் பட்டுள்ளது. நாச்சியார் திருமொழி என்று அத்தொகுப்புக்குப் பெயர் வழங்குகிறது.

நாச்சியார் திருமொழியில் ஏறக்குறைய நூற்றைம்பது பாடல்கள் உள்ளன. இவை திருப்பாவை போலப் பரவியுள்ளன என்று கூற முடியாது. நாச்சியார் திருமொழி முழுவதும் காதல் பாடல்களே. கண்ணனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் வைத்துப் பாடப் பெற்றவை இவை.

பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகவே பாடி அவன் இளமை விளையாட்டையும் அழகையும் இனிமை யையும் காண்கின்றார். இறைவனை அம்மையாகவும் அப்பனுமாகவும் வணங்குதல் தக்கதாகும்; அப்பொழுது மதிக்க முடியுமேயன்றி அவனோடு இரண்டறக் கலக்க முடியாது. இறை உணர்வோடு தாம் கலப்பதையே ஆழ்வார்கள் விரும்புகின்றனர்; தன்னுள் அவனை வைத்தும், அவனுள் தன்னை வைத்தும் ஒன்றிட முனைகின்றனர். அத்தகைய உணர்வைத் தரக்கூடியது காதல் உணர்வே, மற்றும் கண்ணன் ஆயர் மகளிரோடு ஆடியும் பாடியும் மகிழ்ச்சி தந்து உறவாடிய நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை. கண்ணன் அழகன்; கன்னியர் ஒவ்வொருவரும் அவனைக் காதலிக்கத் தக்க கவர்ச்சி அவன்பால் உள்ளது. காதலைப் பற்றிப் பாடும்போது கவிதை சுவை பெறுகிறது; உணர்வுப் பெருக்கால் உயர்கிறது; ஆழ்வார்கள் பலர் அவனைக் காதலிக்கும் பெண்ணின் மனநிலையில் இருந்து பாடி