உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ராசி

அழைத்தனகாண்; கூவினகாண்-காண் முன்னிலை அசைகள் . பந்து ஆர் விரலி-பந்தினைக் கைப்பற்றும் விரலை உடையவள். இது அவள் செல்வ மகள் என்பதை உணர்த்துகிறது; மைத்துனன்-கணவனை உணர்த்திற்று; மைந்து-வலிமை; வலிமை உடையவன் என்பதாம். இப்பொழுது கணவ ளின் தம்பிக்கு அந்தப் பெயர் வழங்குகிறது; பேச்சு வழக்கில் மச்சினன், மச்சான் என வழங்குகின்றனர்.

பேர் பாட-புகழ்பாட; பெயர்-பேர் எனத் திரிந்ததுகண்ணன், நப்பின்னை மைத்துனன் என்பவை பாமாலைப் பகுதிகள்.

19. குத்து விளக்கெரிய (கண்ணனை எழுப்பி அனுப்புக எனல்)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்; எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்; தத்துவ மன்று; தகவேலோ ரெம்பாவாய்.

பதவுரை

குத்து விளக்கு எரிய-குத்து விளக்கு ஒளி வீச

கேரட்டுக் கால் கட்டில்மேல்-யானை தந்தத்தினால்

ஆகிய கால்களை உடைய கட்டிலின் மீது