உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 匹r°

ஊற்றம் உடையாய்-அருள் மிக்கவனே! பெரியாய்-பெருமை உடையவனே! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே-உலகில் தோன் றிய ஒளிப் பொருளே! துயில் எழாய்-துயில் எழுக; மாற்றார் உனக்கு வலிதொலைந்து-பகைவர் உனக்குத் தோற்று, உன் வாசற்கண் ஆற்றாது வந்து-உன் வாசலில்

செயலற்று வந்து உன் அடி பணியுமா (று) போல-உன் கால்களில்

விழுந்து வணங்கிப் போற்றுவது போல யாம் போற்றி-வந்தோம் புகழ்ந்து-யாம் உன்னைத் துதித்து வந்தோம்; புகழ்ந்து உயர்வோம்.

தொகுப்புரை

கறக்கும் பால்பாத்திரங்கள் பொங்கி வழியும்படி பால் தரும் வளம்மிக்க பசுக்கள் மிகுதியாகப் படைத்தவன் மகனே! விழித்து எழுக! பகைவர்கள் போரில் தோற்றுப் பின் உன்னை அடைக்கலம் அடைந்து போற்றுவதைப் போல் உன் திருவடிகளை யாம் போற்றிப் புகழ்ந்து உயர்வு பெறுவோம்.

விளக்கவுரை

எதிர்பொங்கி மீது அளிப்ப-நிறைந்துவழிய; மாற்றாதுமாறுபடாது; தொடர்ந்து பகைவர்கள் வேறு கதி இல்லாமல் நிதான் அரண் என்று வந்து வணங்குவதைப்போல யாம் அடைக்கலம் அடைகின்றோம்,

பகைவர் சரணடைவதுபோல் யாம் சரண் அடை கின்றோம் என்பதை முழுமையாக எடுத்துக் கொள்ளக் கடாது. பகைவர்கள் அச்சத்தினால் அடிபணிகிறார்கள்;