உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வளம் சுரக்க செல்வம் கொழிக்க' என்று சமுதாய உணர்வுப் பாடல்களாக இவை விளங்குவதால் இவை பெரிதும் போற்றப்படுகின்றன. - -

திருப்பாவை படிக்கிறோம்; அது என்ன கூறுகிறது என்று கேட்டால் பாவை நோன்பு பற்றிக் கூறுகிறது என்ற பதில்தான் கிடைக்கிறது. மார்கழி மாதம் மழை பெய்யும் மாதம்; புதுநீர் வெள்ளம் கானும் பருவம்; அப்பொழுது மக்கள் ஆறுகளுக்குச் சென்று நீராடி மகிழ்வு தெரிவித்துக் கொள்கின்றனர். கன்னிப் பெண்கள் காலையில் எழுந்து ஒருவர் மற்றவரை எழுப்பிப் பாவையை வழிபடும் களம் நோக்கிச் செல்கின்றனர். அந்த விழாக் கொண்டாடினால் நாட்டில் மழை பெய்யும் என்று நம்புகிறார்கள்.

இந்த விழா தொன்று தொட்டு வரும் திருவிழா : பாவையின் பேரைச் சொல்லி நோன்பு நோற்று அத்தெய் வத்தை வழிபடுகின்றனர். இப்பாடல் அமைப்பைக் கண்ணனின் பாமாலையாக மாற்றியது ஆண்டாளின் தனித்திறம்.

பாவை வழிபாட்டுக்குப் பறை தேவை என்றும், அதனைத் தமக்குத் தருமாறும் இளம் கன்னியராகிய ஆய மகளிர் பாடுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. ஏனைய ஆழ்வார்களைப் போலவே இறைவனோடு தம் உறவு எப் பொழுதும் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதே அவர்கள் இறுதி வேண்டுகோள்.

இந்நுட்பதைப் பாயிரமாக வந்துள்ள தனியன்களில் ஒன்று நன்கு எடுத்துக் காட்டுகிறது.

இதனை நற்பாமாலை என்றே கூறுகிறது. கவித்துவமும், உயர்ந்த கருத்துகளும், சமுதாய நல் உணர்வு வளர்க்கும் அமைப்பும் கொண்டுள்ள இத்திருப் பாவை நாட்டுப் பாடல் முறையில் நலம் கனிந்து நம் உள்ளத்தை உருக்கி உயர்த்துகிறது.