உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 仄广J”

பதவுரை

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி-திரி விக்கிரம அவதாரத்தில் இவ் உலகத்தை உன் கால் அடிகள் கொண்டு அளந்தாய், உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்.

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இராவணனை அழித்தாய் உன் புகழ் பாடுறோம்.

பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-அழிய வண்டியை உதைத்தாய்; உன் புகழைப் போற்றுகிறோம்

கன்று குணிலா எறிந்தாய் - கன்றை எறிதடியாக எய்தவனே கழல் போற்றி-உன் வீரக்கழல் போற்றுகிறோம். குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி-மலை யைக் குடையாகப் பிடித்தாய் உன் பண்பு போற்றுகிறோம். வென்று கைகொடுக்கும் நின் கையில் வேல் போற்றி-- வெற்றியடைய உதவும் உன் கையின்கண் உள்ள நின் வேலைப் போற்றுகின்றோம்.

என்றென்றும்-எக்காலத்தும் உன் சேவகமே ஏத்தி-உன் வீரத்தையே புகழ்ந்து பேசி பறை கொள்வான் இன்று யாம் வந்தோம்-பறை பெற்றுக்கொள்ள இன்று யாம் வந்திருக்கிறோம்.

இரங்கு-எமக்கு இரங்கி அருள்க.

தொகுப்புரை

அன்று இந்த உலகத்தை உன் கால் அடிகளால் அளந் தாய்; தென்னிலங்கை அரசனை அழித்தாய்; சகடாசுரனை உதைத்து அழித்தாய் ; கன்றை, எறிதடியாக விளா மரத்தில் எறிந்தாய்; குன்றைக் குடையாகப் பிடித்தாய் : வெற்றிக்குக் காரணமாக இருக்கும் உன் கைவேல் சிறப் புடையது. உன் திருவடியைப் போற்றிடுவோம். உன்