உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 rr&

தொகுப்புரை

திருமாலே, மணிவண்ணா, மார்கழி நோன்புக்கு அடி யவர்களாகிய யாம் உன்னிடம் வேண்டுவன யாவை என்று தி கேட்பாயாகில் உன் பாஞ்ச சன்னியம் போன்ற வெண் சங்குகள் பலவும், பேரொலிதரும் பறைகளும் பல்லாண்டு பாடுவோரும், திருவிளக்குகளும் கொடிகளும், விதானங் களும் ஆகியவையாகும். ஆலின் இலையில் துயில்கொள்ளும் தலைவனே! நீ இவற்றைத் தந்தருள்வாயாக,

விளக்கவுரை

மணிவண்ணன்-நீல மணி போன்ற நிறத்தவன்

மேலையார்-மேன்மை மிக்க அடியவர்கள்;

பாஞ்ச சன்னியம் என்பது திருமாலின் கையில் உள்ள

சங்கு; இது உவமை;

விதானம்-துணியால் ஆகிய மேல் கூரைச் சிலை;

பால் அன்ன சங்கு-வெண்சங்கு;

போய்ப்பாடு உடையன-ஒலி எங்கும் கேட்பன; இப் பறைகள் பேரொலி ஒலிப்பன என்பதாம்.

பாடு-ஒலி விதானம்-கவிழ்த்து மூடும் முரட்டுத்துணி. மாலே, மணிவண்ணா, ஆலின் இலையாய்-திருநாமங் கள்; பாமாலை என்க.

27. கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

(மகிழ்ச்சி கொளல்)

கூடாரை வெல்லும சீர்க்கோவிந்தா! உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப்பூவே