பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104❖பூவை. எஸ். ஆறுமுகம்


"ஒ. கே!"

காதல் பதுமையாக நின்றாள் வாணி.

ஆடம்பரமில்லாத, பரிசுத்தமான எழில் நிரம்பி நின்றது.

"வாணியை நான் அடைவதற்காக உண்மையிலேயே நான் தியாகம் செய்துதான் இருக்கிறேன்; இதுவே எனக்கு மாபெரும் பலமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். இப்படிப்பட்ட காதலுணர்வுதானே என்னைத் தியாகியாக ஆக்கியிருக்கிறது! ஆஹா இந்தத் தியாகமனம்தான் நான் உணரத் தலைப்பட்டுள்ள காதலெனும் தத்துவத்திற்குப் பொருளோ?"

வாணியின் நாட்குறிப்புப் பற்றி துப்புத் துலக்க வேண்டுமென்ற ஆதுரத்தில், பேச வாயெடுத்தபோது, அவரது நண்பர் ஏகலைவன் எல்லையம்மன் கோவில் தெருவிலிருந்து வந்தார்.

வாணி மரியாதையாக ஒதுங்கி நின்றாள்.

"வாணி இது!" என்று நாணம் சிலிர்க்கச் சொன்னார்.

"ஓஹோ!" என்று வந்தவர் கைகளைக் கூப்பினார்.

வளைக்கரங்களிலும் வணக்கம் இருந்தது.

'இவர் ஏகலைவன், கதை எழுவதில் இவர் அடியேனைப் பிரத்யட்ச குருவாக மதித்து வருகிறார்.'

வாணி மெல்லிளஞ்சிரிப்பை விட்டு, விழிகளை மூடி, மறுகி, வழி நடந்து நின்றாள்.

"இன்னொன்று. எனக்கு இரண்டாவது சிஷ்யையாக என் வாணிதான் அமரப் போகிறாள்!"

"அப்படியா? நல்லதுதான், ஸார்!"