பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


தவசீலியைப் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டனவே. ஏன் இன்றைக்கென்று தவசீலி ஞாபகம் அடிக்கடி உண்டாகிறது?

நன்னாரி வேர் போட்ட தண்ணிரை ஒரு மடக்கு அருந்தி விட்டு வந்து குந்தினார் ஞானசீலன்.

திரை முதலாளிக்கு அன்புத் திறை செலுத்தி மறுமொழி அனுப்பப்பட்டது.

அதிபர் மணிமுத்து வேலாயுதம் கடிதம் அனுப்பியிருந்தார்.

"அன்புள்ள ஞானசீலன்,

உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உங்கள் சொந்த விஷயங்களில் குறுக்கிடும் உரிமையை நான் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் கருத்தை 'வெள்ளையாக'ச் சொல்லி விட்டீர்கள். எனக்கு ரொம்பத் திருப்தி. உங்கள் காதலி வாணியுடன் நடக்கயிருக்கும் உங்கள் கலியாணத்தை நானே முன்னின்று நடத்தி வைக்கிறேன். எல்லாம் என் செலவு. இது என் கடமைகளுள் ஒன்றல்லவா? நீங்கள் ஆராதிக்கும் அன்பு மகத்தானது!

பிற நேரில்.

அன்புடன்,

மு. மணிமுத்து வேலாயுதம்

செய்தி ஒன்றைச் சொன்னாள் அம்மா.

வாணிக்கு மூன்று நாள் லீவு!...