பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86. ✽. பூவை. எஸ். ஆறுமுகம்




அப்பொழுதும் அவருக்கு அந்த நாட்குறிப்புத்தான் நினைவைத் தொட்டது.

ஏடு ஒன்று:

"...தெய்வத்தை நான் கண்டது கிடையாது. அதனால்

என்ன? எனக்குத் தெய்வமாக விளங்குவதற்கு ஒரு ஐயா .

கிடைத்திருக்கிறார், இது போதாதா?”

ஏடு நாலு:

".யூமான் கோதண்டபாணி அவர்கள் என் பேரில் எவ்வளவு தூரம் பாசம் வைத்திருக்கிறார்கள். இது பூஜை பலன் அல்லாது வேறு யாது?. பூஜா பலனாவது, ஒன்றாவது? அதையெல்லாம் நான் என்ன கண்டேன்?"

ஏடு ஏழு.

"நன்றி சுரக்கும் நெஞ்சோடு நான் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் என்னுடைய அடி நாட்களை ஞாபகப்படுத்தியவாறேதான் இருந்துவருகிறேன். இந்த ஒரு பரிபக்குவம் எனக்கு அப்பியாசப்பட்ட காரணத்தினால் தான், என்னுள்ளே என்னையும் அறியாமல், ஒரு தியாக மனம் உருவாகிப் பக்குவப்பட்டு வருவதைக் காண் கின்றேன். ஏனென்றால், என் நிமித்தம் பல பல தியாகங்களைச் செய்தவர்களுக்கு நான் நன்றிக் கடன் செலுத்தி ஆக வேணும். அந்தச் சந்தர்ப்பத்தை ஆண்டவன் எப்போது எந்த ரூபத்தில் எனக்கு அறிமுகப்படுத்தப் போகிறாரோ? நான் எப்படி உணர முடியும்? நான் அபலை; அதிலும் பெண் ஆக, என் கடனை நான் பூர்த்தி செய்துதான் தீருவேன். இல்லாதுபோனால், நான் என் மனச் சாட்சிக்கு மட்டுமல்லாமல், தெய்வமறையாம் திருக்குறளுக்கும் அநீதி இழைத்தவளாக ஆவேன்.