பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 ✽. பூவை. எஸ். ஆறுமுகம்



மனிதனாக உயர்த்திக் காட்டுவது!” எவ்வளவு சத்தான வாசகம் !

ஏடு முப்பத்தைந்து

கோசலை அம்மாள் சொன்னாள், அவர் என்னைப் பற்றிக் கேட்டாராம். தெய்வமே, இந்த ஒரு வரத்தையாகிலும் தா. என் மனம் அவரை விரும்புகிறது. ஆகவே, என்னைச் சோதிக்காமல், என் ஆசையைப் பூர்த்தி செய்!

ஏடு முப்பத்தெட்டு

எனக்கே ஆச்சர்யமாகப் போய் விட்டதே!. அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட சமயம் நான் "என் நினைவு ஒன்றுடன் இங்கிருந்து புறப்பட்டு, அதே என் நினைவு ஒன்றுடனே அங்கிருந்து புறப்பட்டு வாருங்கள்!' என்று எப்படியோ டயலாக் பேசி விட்டேனே!.

நடந்த சிலவற்றை நினைத்துப் பார்க்கவும், படித்த சில குறிப்புகளை மீண்டும் எண்ணிப் பார்க்கவும் முனைந்தார் ஞானசீலன். அவருக்கு அப்பொழுது தூக்கம் விழிகளைச் சுற்றியது.

பாம்புகளை ஆட்டுவிப்பவர்களுக்கென்று மராத்திய மன்னர்களால் நிர்மாணிக்கப் பட்டதாகச் சொல்லப் படுகின்ற அந்தப் பாம்பாட்டித் தெரு நிச்சிந்தையாகக் கண் வளர்ந்து கொண்டிருந்தது.