பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அதன்பின் ஆண்டுகள் எத்தனையோ ஊர்ந்தன; உருண்டன. ராமுவை அவள் காணவில்லை; காண முடிய வில்லை. என்ருலும் அக்காட்சி நேற்று நடந்தது. போலவே அவள் மனதில் பதிந்திருந்தது, பிறந்த மண்ணின் நினைவுபோல. கண்ணிர் ஆருக வழிய ராமுவை வழியனுப்பி காட்சியை அவளால் மறக்கவே முடியாது. பிள்ளைப் பிராயத்துக் கனவுலக நிகழ்ச்சிகளே அப்படித்தானே? நினைவுகள் வான வில்லின் வண்ணங் கள்போல நிறம் மாறின. வானவில்லின் வண்ணங்க ளெனில் காட்சிக்கு விருந்தளிக்குமே! ஆளுல் இந்த நினேவுகள்-நினைவின் நிழல்கள்-கருத்தைக் கருக வைத்துவிடுகின்றனவே! . உருண்டுவிட்ட இத்தனே ஆண்டுகளில் அந்த நினைவு முகத்தை, ஆசை முகத்தை அவள் ஒரு முறை கூடக் காணக்கூடாமல் போயிற்று. திரும்பிய அவள் வாழ்க் கைப் பாதை பட உலகின் தலைவாயிலில் மடங்கியது. காமுரோகிணி ஆளுள். டைரக்டர் பிரபாகர் அறிமுகம் ஏற்பட்டு, ரோகிணியைத் திரை உலகுக்கு அறிமுகம் செய்விக்கப் பொறுப்பேற்ருர். சிசித்த ரோஜா அங்கம். அங்கமாக வளர்ந்தது; அவர்கள் அன்பும் வளர்ந்தது. பிரபாகரனிடம் இனமறியாத பந்தம், காந்தம் போலக் கவர்ந்திழுக்கப்படுவதை ஒவ்வொரு சமயமும் ரோகிணி உணர்ந்திருந்தாள். அவள் உள்ளுணர்வு உணர்த்திக் காட்டியது, ஞாபகத்தை வரவழைப்பதற்கென எழுதி வைத்திருக்கும் டயரிக் குறிப்பொன்று. . ஒவியம், நாட்டியம், சங்கீதம் ஆன துறைகளில் ரோகிணி தேர்ந்திருந்தாள். அவள் சூழ்நிலை அப்படி வாய்த்தது. சூழ்நிலைதான் உள்ளம் உருத்தேற வழி வகுத்துக் காட்டும் பயிற்சிக்கூடம் காலம் முத்திரை யிட்ட அவள் கன்னி வாழ்விற்கு மங்கள கீதம் பாட