பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நான் எங்கே இருக்கிறேன்? இங்கே எப்படி வந் தேன்? ஐயோ, நான் போகவேண்டும்...ஆமாம்; நான் போகவேண்டும்’ என்று பதறிஞன் நாடோடி.

ஐயா’’ என்ருள் நடிகை ஆதரவு கணிய. "ஐயோ’’ என்றலறிஞன் நாடோடி, நெஞ்சம் வெடிக்க.

என்ன ஐயா?” அவன் கரங்கள் வலது கண்ணே இறுகப் பிடித்திருந் தன. அதன் இடைவெளியில் ரத்தம் கசிந்துகொண் டிருந்தது. கண்ணிலிருந்து ரத்தம் பீறிடுகிறதே. எங்கேனும் புண்பட்டுவிட்டதா, ஐயா?” 'இல்லை. நான் புண்படுத்திக்கொண்டுவிட்டேன்.” என்ன?’’ "ஆமாம்; விசித்திரமாக இருக்கிறதா? நான் விசித் திரப் பிறவி என் காதல் விசித்திரமாகிவிட்டது. சின்ன வயசில் ஒன்ருய் விளையாடிய என் கனவுப் பதுமையை இடையில் பிரிந்து, பின் சந்தித்தேன். என் காதலை வெளி யிட்டேன். அவள் நிராகரித்தாள். என் உள்ளத்தில் அவளுக்குத்தான் இடமுண்டு. பின்னே இந்தக் கண் எதற்கு? அதுவும் அன்று அவளது விளையாட்டுக்குக் காணிக்கையாகிவிட்ட கண் எதற்கு? என் அகக்கண்ணில் தான் என்றும் எழில்நடமிடுகின்ருளே என் இதய ராணி...” நாடோடி சிரித்தான். சித்தம் மாறிய சிரிப்பல்ல; சிந்தை மாற்றப்பட்ட அவலச் சிரிப்பு. நாடோடியின் கதை அவளைத் திகைக்கச் செய்தது. அவன் சொன்ன கதைக்குத் தானும் ஏதோ தொடர்பு