பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


வமிசத்து ரகசியம்...' என்று சவால் விட்ட மாடனத் தடுத்து நிறுத்தித் தோன்றினுள் ஒரு யுவதி-காட்டு மலர். 'அந்த நஞ்சை பொறி தட்டுற போதுக்குள்ளே நானும் தனிய வச்சிடட்டுமா... என்ன பந்தயம்?...” என்று பதில் சவால் விடுத்தாள் அந்தப் பெண் கூட்டம் கைதட்டிற்று. பெண் பாருங்கள்! இமை பாவாமல் அவளேயே ஒரு முறைக்கு இரு முறையாக, மூன்று முறையாக ஏற இறங்க பார்த்தான் மாடன். அவள் இடுப்பில் செருகி இருந்த வேர் ஒன்றைப் பார்த்து விட்டான். அவனுக்கு மனம் நொந்து விழுந்தது. தளுக்காகச் சமிக்ஞை காட்டி அந்தப் பெண்ணே அமைதிப்படுத்தி அன்றைய நாடகத்தை ஒப்பேற்றி விட்டான். மறுநாள் மாடன் அந்தப் பெண்ணை வசியப் படுத்தித் தன் மனைவியாக்கிக் கழுத்தில் ஒரு பவுனில் சரடு செய்து தாலிகட்டினன். அவள்தான் செவந்தி! பாம்புக்கடி விஷத்தைப் போக்குவதில் ஒரே துறையில் தேர்ந்த இருவர் ஜோடி’யாகி விட்டால் அவர்கள் வாழ் விற்கு கேட்கவாவேண்டும்? நினைவுகள் ஏடு புரண்டன. அந்தி வந்தது. - "எங்கே போச்சு மச்சான். காலம்பறக்கஞ்சிக்குக் கூட வரலயே. பாம்புப் பெட்டி, மகுடி எல்லாம் போட்ட இடத்திலேயே இருக்கே...' என்று செவந்தி மனம் பொருமினுள். - - 'ஏய், மாடன் எங்கே?' என்ற குரல் கேட்டுத் திரும்பினுள். மூப்பனரும் பக்கத்தில் பட்டாமணியகார ஐயாவும் நின்று கொண்டிருந்தனர். . . . . . . . -