பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3.96 பண்ணையாள் கூறிய விபரம் அம்பலத்தின் ஆத்திரத் தைக் கிளறிவிட்டது. கூடப் பிறந்த அக்காளாக இருந்தும்கூடத் தனக்குப் பவளக்கொடியைத் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்று ஆத்திரப்பட்டான் கிழவியின் மேல். அக்குடும்பத்தை ஒழித்துவிட வேண்டு மென்ற ஒரே நோக்கமே அம்பலத்தின் மனதில் வைரம் பாய்ந்தது. என்ன அகங்காரம்: நேற்றுப் பிறந்த பயல்: வக்கத்த அனுதைப் பயல் நடேசன் என் சொத்தைத் திருடிக்கிட்டான? பார்க்கலாம், அவங்க ரெண்டு பேரும் எப்படி சோடியா இருக்காங்கண்ணு?" அடுத்த வினுடி அம்பலம் வெற்றிச் சிரிப்புச் சிரித் தான். மேற்கண்ட விஷ விதை அவனது வைர நெஞ்சில் சதியாகப் பரிணமித்தது. பிறுநாள் இரவு மூன்று நாழிகைப் பொழுது. ஏய்.” எசமான்.”

  • சொல்றதைச் செம்மையாக் கேட்டுக்கணும். இன் ளிைக்குச் சாமத்துக்குக் கைவசமிருக்கும் சாராயப் புட்டிகள் அத்தனையையும் அப்படியே கொண்டு போய் அந்த நடேசன் குடிசையிலே வச்சிரு. மற்றபடி இந்தத் துப்பு யாருக்கும் மூச்சுக் காட்டப்புடாது. உடனே ஒடிப் போய்ப் போலீஸ்காரங்கிட்டே விசயத்தைச் சொல்விக் கையோடே அழைச்சிட்டு வந்திடு. கையும் மெய்யுமாப் பிடிபட்டப்புறம் பயல் எப்படித் தப்புருன்னு காணலாம். அவன் கையிலே விலங்கிட்டாத்தான் அவன் செஞ்ச பழிக்கு என் மனசு குளிரும்.’’