பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


உன் தாலிக் சரட்டை உன் பாதத்திலே வச்சுக் கும்பிட்டு தாரேன்...செவந்தி... பெண்ணுக்குப் பெண்தான் மனசு இளகவேணும்... செவந்தி.” மூப்பனரின் மனைவி கதறினுள் புலம்பினுள். அப்பொழுது யாரோ ஒருவர் ஓடி வந்து அந்த அம் மணியிடம், அம்மா, முதலாளி ஐயாவுக்கு முகமே மாறி வருதுங்க. வழியிலே கண்ட மாடனக் கெஞ்சினேன். ஐயாவும் மன்னிப்புக் கேட்டு அழைச்சாரு. வெறிப் பிடிச்சவன் போல அவன் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒடிப்போய் விட்டானுங்க...வேறே இந்த வட்ட த்திலே விஷத்தைப் போக்கிறவுங்க யாருமே இல்விங்களே...' என்று மூச்சுப் பிடிக்கக் கூறிஞன். - குறப்பெண் எழுந்து விட்டாளே? 'அம்மா, வாங்க...ஒடியாங்க...எம் பொறகாவே. ஊசி குத்திர அம்மாம் பொழுதுக்குள்ளே உங்க வீட்டுக் காரரு விஷத்தைத் தணிச்சுப்பிடுறேன்...' என்று திட வைராக்கியம் குரலில் அடித்தளமிட்டு ஒலிக்கக் குரல் கொடுத்தவாறு ஓடினுள் செவந்தி. அரை நாழிகை சென்றதும், புன்னகை கோலம் செய்த சிரித்த முகத்தோடு வெற்றிக் கண்ட பெரு மிதத்தில், பெண் ஒருத்திக்கு மாங்கல்யப் பிச்சை ஈந்த புண்ணியத்துடன் கடமையுடன் திரும்பி வந்து கொண் டிருந்தாள் செவந்தி. 'ஏலே செவந்தி...நில்லு குட்டி அங்கணயே. எம் பிட்டு ஆசையிலே மண்ணைப் போட்டிட்டியே! பழிவாங்க நினைச்சிருந்த என் கணுவைக் கலைச்சிப்பிட்டியே!... ஈவு இரக்கமில்லாம உன் தாலிச் சரட்டை அடிச்சுக்கிட்டுப் போன அந்த ஆளே நான்தானே கொஞ்ச முந்தி பல்லுப்