பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழின் ஆயுன் ன்ேடலப்பொடி பூசிய ஆண்டவனுக்கு மண்டை ஒடு ஏந்திப் பிச்சை எடுக்கவேண்டிய தலைவிதியும் வாய்த்துவிட்ட அந்தப் பொல்லாச் சொப்பனத்தின் மெய்நிலை இன்று நேற்று ஏற்பட்ட கதையா என்ன. என்னவோ, அவன் நிலையை எண்ணிப் புழுங்கிய வாறு, அவன் கையில் ஏந்திய திருவோட்டுடன் நின்று கொண்டேயிருந்தான். அவன் ஒரு பிச்சைக்காரன்! என்னைப் பெத்த ஜயாமாருங்களே! அம்மா மாருங் களே! கண்னெடுத்து இந்த ஏழைச் செம்மத்தைப் பார்த்து, மனசிரங்கி, கையிலே மடியிலே இருக்கிற ஒரு காசு ரெண்டு காசு தருமம் போடுங்க சாமிகளே!... பசி காதை அடைக்குதுங்களே! பசி வவுத்தை கிள்ளுதுங்களே! எங் கடவுளுங்களே பெரிய மனசு பண்ணுங்க தொரை: மாருங்களே!... இத்தப் பாழத்த பாவிக்கு ஒரு காசு நீங்க தந்திங்கன்ன, பகவான் உங்களுக்கு ஒண்ணுக்கு ஒம்பது காசுங்க குடுப்பாறுங்க!...' - f பிச்சைக்காரனுக்கு வாய் வேதாந்தம் எப்போ துமே ஆகிவந்த ஒரு செப்பிடுவித்தை! யார் யாரோ வந்தார்கள்; போனர்கள்!அவர்களுக்கு இந்தப் பிச்சைக்காரனப் பற்றியா கவலை! . . . . " " -