பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


ணத்திலிருந்து எனக்காக டாண்’ என்று ஓடிவந்து பூவைமாநகரில் குதித்து விடுவீர்களே... இப்போது வரு ஷம் ஒன்ருகப் போகிறதே...! எனக்கென துளி இடமாகி லும் அளியுங்கள். துளி இடம்! இனியும் என்னைச்சோதிக் காதீர்கள். பட்டதெல்லாம் போதும்: நான் கணத்துக்குக் கணம் இறந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை தங் களது தேவ தரிசனம் இம்முறையாகிலும் கிடைக்கச் செய்வீர்களென்று நம்புகிறேன். சருகாகிவிட்ட என்னைத் தளிராக்குவீர்களா?...அத்தான்...!" தங்கள் அடியாள், அபலை மீனு சிதம்பரம் துளிர்த்திருந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டான். - என் சீரழிந்து போயிருந்த வாழ்வைச் செம்மைப் படுத்தியவன் ராமனுதன். ஆனல் அதே ராமனுதன் தன் னுடைய அபலை மனைவியின் இத்தனை கடிதங்களுக்கும் இரக்கங் காட்டினதாகத் தெரியவில்லையே. எனக்கு எத்தனை எத்தனை உரிமை மொழிகளைச் சொன்னர். என் பொருட்டு அவர் வடித்த கண்ணிர்தானே என் திரை யிட்ட கண்களைத் திறந்துவிட்டது. ஆனல் காலமெல்லாம் கண்ணிர் வடித்துக் கதறிக் கொண்டிருக்கும் தன் அபலை மனைவி மீளுவின் வாழ்வுக்குப் புத்துயிர் அளிக்க உணர் வில்லையே. இதயமற்ற பாவி அவர் ஆம்; அவரை இப் போதே கண்டு, எப்படியும் அவர் மனைவியை ஏற்றுத் திரும்ப ஆவன செய்ய வேண்டும். அப்புறம் தான் ஆபீ செல்லாம். அப்பப்பா, இத்தனை நாள்களாக இந்த ரகசி யத்தை மூடி மறைத்துவிட்டாரே...' என்று வீறுடன் மொழிந்த சிதம்பரம் மேலே தொடர்ந்து பேசத்தொடங். கின சமயத்தில், அவன் கையில் உறையிட்ட கடித