பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


நேரம்: எட்டு-பதினேந்து: இரவு. இடம்: மண்ணடியில் ராமசாமித் தெரு. பெரிய மனிதருக்கென்று தயரான நாற்காலி பெரி தாகக் காட்சியளிக்கவே, வந்தவர் தாராளமாக அமர்த் தார்; அமர்த்தபின் புவனநாதன ஏற இறங்கப் பார்த் தார். அவனுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அவ னுக்கு மனங் கொள்ளா மகிழ்வு, வாய் கொள்ளாச் சிரிப்பு: கண் கொள்ளாக் கனவு. ஊரிலே உலகத்திலே பெண்ணைப் பார்க்கிறதுக்கு இளைஞர்கள் போவாங்க; இங்கே மாப்பிள்ளையே பார்க்கப் பெண்ணைப் பெற்றவர் வந்திருக்கார். கடைசியிலே, பெண் படவேண்டிய வெட்கத்தை யெல்லாம் அவன் படவேண்டி வந்தது. பையன் காப்பி கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான். சாப்பிடுங்க!” எவர்ஸில்வர் பாத்திரத்தில் பெரியவரின் வழுக்கை மண்டை ஜம்மென்று பளிச்சிட்டது. "சும்மா உட்காருங்க, புவனநாதன்!’ அவன் மாப்பிள்ளை முறுக்குடன் உட்கார வேண்டு மென்றுதான் பிரயத்தனப்பட்டான்; முடியவில்லை. உள்ளத்திலிருந்து ஒருகுரல் மங்களநாயகியை காக்காய் பிடித்தது மாதிரி அவள் அப்பாவையும் காக்காய் பிடிக் கிற பதவிசைப் பார்!’ ஆமாம், பரீட்சையெல்லாம் எப்படி?’’ பி. ஏ. யில் முதல் வகுப்பு கிடைத்துவிடும், மூன்று பகுதிகளிலேயும்!”