பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையும் உயர்ந்தது. கண்ணேக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்த அவனுக்குத் துணை கிடைத்துவிட்டது, கண்ணுமூச்சி விளையாட்டுக்கு. அந்தத் துணை அவனுக்கு உயிர்த் துணை பாள்ை. சாரதா திருமதி சுகுமாரன் ஆளுள். வாழ்வில் வசந்தம் வந்தது. வசந்தமும் வானம்பாடியுமாக வாழ்க்கை வந்தது; நடந்தது; பறந்தது. இருவர் மூவர் ஆகும் வாய்ப்பு அண்டியது. குழந்தை ராதை அவதரித் தாள். குழந்தை பிறந்த வேளை பெற்றவளேப் பைத்திய மாக ஆக்கியது. சாரதாவுக்கு மூளைத் திருப்பம் ஏற்பட். டது. அதுவே சுகுமாரனுக்கும் வாழ்வில் மூலைத் திருப் பமோ? அண்டை அயலிலெல்லாம் மனைவியைக் காட்டின்ை. பட்டணத்திற்கு வந்து காட்டினன். படித்த டாக்டர்கள் உதட்டைப் பிதுக்கினர்கள், சாரதாவின் சித்தப் பிரமையைப் போக்குவது சாத்தியம் அன்று என்பதாக. கடைசியில் தெய்வமே என்று சென்னையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தன் ஆருயிர்த் துணைவியைச் சேர்த்துவிட்டு உடைந்த உள் வாத்துடன் வீடு திரும்பினன். - அப்பொழுது அந்தப் பாழும் பட்டிக்காட்டிலே சுகு மாரனுக்கு அவன் சின்னஞ் சிறிய பாப்பாதான் அகில உலகமாகப் பரிணமித்தது; தனலாகத் தகிக்கும் நெஞ்சுக்குத் தண்மை தந்தது. குழந்தை உதட்டுச் சிரிப்பில், விழி வெட்டில், ங்கா பாஷையில் அப்பா வுக்குக் கதையாகச் சொன்னது. அதல்ைதானே இந் நேரம் வரையில் சுகுமாரன் குற்றுயிரும் குலே உயிரு மாகவேனும் உயிரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ஏதே இருக்க முடிந்தது. இருக்க முடிகிறது: உற்றவர்கள் உறவு சொல்லி, சுகுமாரனிடம் வந் தார்கள். அவன் இரண்டாம் கல்யாணம் செய்து