பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

259


பகவன்? என்ருர் . ஒரிடத்தே அசைவின்றி யமைக்கப் பெற்ற மாடக்கோயிலின் திருமேனி போலன்றி அன்பர் விரும்பிய இடங்களுக்கெல்லாம் வந்து அருள்சுரக்கும் முறையில் நடமாடும் திருக்கோயிலாகிய உடம்போடு எழுந்தருளும் திருவுருவாகத் திகழ்வார் நேயமலிந்த அடி யார்களாதலின் அவர்களே நடமாடக் கோயில் நம்பர் 2 என்ருர் பராவு சிவர் என்பர் அருண ந் தி சிவாசாரி யார். திருக்கோயிலில் இறைவனே நோக்கிச் செய்யும் வழி பாடு அவ்விறைவனுக்கன்றி அவன் அன்பர்க்கு நேர் முறையிற் பயனளிப்பதில்லை. இறைவனடியார்களாகிய அன்பர்க்குச் செய்யும் பூசனே அவர்க்கேயன்றி அவர்தாம் நுகர்ந்தன யாவும் தனக்குரியனவா மாறு அவருயிரிற் குடி கொண்டு விளங்கும் இறைவனுக்கும் உரியதாகின்றமை யின் அரன் பூசையினும் அடியார் பூசையே இருமடங்கு பயன்தரும் என்பதாம். அடியார்க்கு அளித்தது அரனுக் கும் ஆம் என்பது,

'அண்டமோ ரணுவாம் பெருமைகொண் டனுவோர்

அண்டமாஞ் சிறுமைகொண் டடியேன்

உண்டஆண் உனக்காம் வகையென துள்ளம்

உள் கலந்தெழு பரஞ்சோதி:

என்பது கருவூர்த் தேவர் திருவிசைப்பா.

171. அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்

சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலுரண் பலத்துக்கு நிகரில்லே யென்பது நிச்சயந் தானே. (1860) அடியார்க்கு அன்னமளித்தலின் சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) அந்தணர் குடியிருப்பூர்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அநதணர்க்கு ஈவதால் வரும் பயன் யாது?