41
களின் அரியேறே (சிங்கமே)! வேலேந்திய கையையுடைய பெருமை சான்ற செல்வனே! குருகுமலையைப் (கிரவுஞ்ச கிரியைப்) பிளந்த-குறையாத வெற்றியினையுடைய - விண்ணோடு மோதும் நீண்ட மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்ட தலைவனே! பலரும் புகழும் நன்மொழி வழங்கும் புலவர்களின் தலைமை ஏறே! பெறுதற்கு அரிய நன்மரபினையுடைய — பெரிய பெயர் பெற்ற முருகனே! ஒன்றை விரும்பி வந்தோர்க்கு அதனே நிறைவிக்கும் பெரும் புகழாளனே! துன்புற்றோர்க்கு அருள் செய்கிற — பொன்னணி பூண்ட சேயோனே! வந்து மண்டி மோதும் போர்களைக் கடந்த—வெற்றி பாடலுக்கு உரிய மார்பிலே, பரிசில் வேண்டிவரும் அன்பர்களைத் தழுவித் தாங்கிக் காக்கின்ற — அன்பு அச்சத்திற்கு (பய பக்திக்கு) உரிய நெடிய செவ்வேளே! பெரியோர்கள் போற்றும்-பெறலரும் பெயர் பெற்ற கடவுள் தலைவனே! சூரபன்மனின் குலத்தை வேரோடு அறுத்த ஆற்றலையும் மத வலிமையையும் உடையவனே! போர்வல்ல மறவனே! மேலான கொடைத் தலைவனே! என்றெல்லாம் பலவாறாக யான் அறிந்த அளவு நின்னைப் போற்றியும் மனநிறைவு பெறாதேனாய், நின் பெருமை முழுதும் அளவிட்டு அறிந்து போற்றுதல் உலகில் உள்ள உயிர்கட்கு அரிதாதலின் இயன்ற அளவு போற்றி, நின் திருவடியைப் பெறக் கருதி வந்துள்ளேன் ; நின்னோடு ஒப்பார் இல்லாத புலமையுடையவனே! அடியேற்கு அருள் செய்க!” என்று நீ உள்ளத்தில் குறித்த எண்ணத்தைச் சொல்லாத அளவிலேயே (சொல்வதற்குள்ளேயே),
(281-286) உடனே உன்னைக் குறிக்கொண்டு, பல்வேறு வடிவினையுடைய குறுகிய பல கூளியர் என்னும் தெய்வப் பணியாளர் (பின் வருமாறு உன்னை முருகனுக்கு அறிமுகப்படுத்துவர்; அஃதாவது:—), விழா நடைபெறும் களத்திலே வீறுடன் (பொலிவுடன்) தோன்றி, ‘இந்த முதிய