பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருமுருகாற்றுப்படை விளக்கம் மதுரையில் வாழ்பவரானலும் நம்மை நோக்கிப் பாடுபவ. ராகையால், புறத்திலிருந்து மதுரைக்கு கம்மை அழைத்துச் செல்கிருர் மதுரை மாநகர் பாண்டிய அரசர்கள் அரசாண்ட இடம். பல காலமாகப் பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய மன்னர்கள் இருந்து தம்முடைய வீரத்தையும், கொட்ையையும் புலப்படுத்திய இடம் அது. அன்றியும் தமிழ்ச் சங்கத்தில் பல புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ச் சியைத் தொடர்ந்து கடத்திவந்த இடமும் அதுதான். பழங் காலத்தில் மன்னர்கள் இருந்து வாழ்ந்து அரசோச்சிய நகரங்களுள் இன்றும் சிறப்புடன் இருப்பவை காஞ்சிபுரமும் மதுரையுமே ஆகும். ஆனல் இந்த இரண்டிலும் மதுரை பழஞ்சிறப்புக் குன்ருமல் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது. மன்னர் உறைவிடம் ஆதலின் அந்த கருக்கு. மதில்கள் உண்டு; கோட்டைகளும் உண்டு பழங்காலத்தில் மதிலின் வெளியிலே காவலர்கள் காத்துக்கொண்டிருப் பார்கள். மதிலின்மேல் கொடிகள் ஆடிக்கொண்டிருக் கும். மதுரையில் அடிக்கடி போர் சிகழ்வது இல்லை. அந்தத் திருமதில்வாயில் போர் இல்லாத வாயில், பாண்டியன் மிக்க வீரத்துடன் பகைவர்களை அழித்து ஒடுக்கி விட்ட மையில்ை மதுரையை முற்றுகை இடுபவர் யாரும் இல்லே. மதிலின் வாயிலில் பங்தையும், பாவைகளையும் தொங்க விட்டிருப்பார்கள். அது ஒரு குறிப்பையுடையது. பகை வர்கள் இந்த மதிலினுாடே புகுந்து வரமுடியாது. அப்படிப் புகுந்துவர வேண்டுமானல் ஆண்மையை இழந்து. தாங்கள் பெண்களைப் போன்றவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதற்கு அடையாளமாக மதில்வாயி லிலே கட்டித் தொங்கவிட்டிருக்கும் பந்தையும், பாவை யையும் எடுத்து விளையாடிப் பின்பு உள்ளே போக வேண்டும். பெண்கள் பந்தாடுவதும் பாவையை வைத்துக்