பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் - . 1 #3 குன்று அமர்ந்து உறைதலும் உரியன். "அங்கே உறைதலும் உரியன்' என்று நக்கீரர் சொன்னர். அந்த ஓர் இடம் மாத்திரம் ஆண்டவனுக்கு உரியது அன்று, இன்னும் பல இடங்கள் உண்டு என்பதை அந்தக் குறிப்புக் காட்டுகிறது. அதுமட்டு மன்று என்று சொல்லி மேலே தொடர்ந்து சொல்கிரு.ர். குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று. (அதாஅன்று-அதுவல்லாமல்) திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பற்றிச் சொன்ன பிறகு, "அதோடு மட்டுமன்று, இன்னும் சொல்கிறேன்' என்ற குறிப்பை வைத்துப் பேசினர் ாக்கீரர். மேலே திருச்சீரலைவாயின் பெருமையைச் சொல்ல வருகிருர், முருகப் பெருமான் ஆறு முகங்களோடும். பன்னிரண்டு திருக்கரங்களோடும் எழுந்தருளும் கோலத்தை அந்தப் பகுதியில் விரிவாக எடுத்துக் காட்டுகிருர். திரு-8