பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் - #33 விபுவாய் இருக்கும் அவனுக்கு யாவும் தெரியும், அவன் முற்றறிவுடையவன்; சர்வக்ஞன். நூலறிவினல் புலனாகாதவற்றை ஆசிரியரை அடைந்து வழிபட்டுக் கற்றுக்கொள்வது மரபு. மாணுக்கனுக்கு உண்டாகும் ஐயந்திரிபுகளைப் போக்கி மெய்யை அறி வுறுத்துவது குருவின் செயல், எந்தத் துறையில் அறிவு பெற வேண்டுமானலும் அதற்கு ஏற்ற ஆசிரியனே நாடிப் பயிற்சி பெற வேண்டும். அப்படிப் பெற்ருலும் அந்தத் துறையில் முழுமை பெற முடியாது. அந்த ஆசிரிய .ணுக்கே விளங்காத பகுதிகள் பல இருக்கும். அவனே விடச் சிறந்த அறிவும் அநுபவமும் பெற்ற ஆசிரியனே அடைந்தால் முன்னே கற்பித்த ஆசிரியனுல் விளக்க முடியாதவற்றை இந்த ஆசிரியன் விளக்குவான். கீழ் வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்களுக்கு மாளுக்கன போய்க்கொண்டிருந்தால், கல்வி கற்பிக்கும் ஆசிரியர் களும் வகுப்பின் உயர்வுக்கு ஏற்றபடி தகுதியில் உயர்ந்துகொண்டே வருகிருர்கள். கீழ் வகுப்பு ஆசிரியர் நீக்கமுடியாத ஐயங்களே மேல் வகுப்பு ஆசிரியர் தெளிய வைப்பார். நூல்களால் அறிய வாராமல் எஞ்சியிருக்கும் பொருள்களை ஆசிரியர் விளக்குகிருர், ஒராசிரியர் தம்மால் விளக்க முடியாது என்று சொன்ன. எஞ்சிய பொருளைப் பின்னும் சிறந்த அறிவுள்ள ஆசிரியர் விளக்குகிருர், இப்படி ஆசிரியரின் தரம் மேன்மேலும் உயர்ந்து செல்கின்றது. எல்லா ஆசிரியர்களுக்கும் மேலான ஒப்பற்ற ஆசிரியன் இருந்தால் அவன் மற்ற வர்களால் தெளிவிக்க இயலாத பொருள்களே விளக்குவான், அவ்வாறு உள்ளவன் முருகன். அவன் மெய்ஞ் ஞான பண்டிதன். மெய்ப்பொருளே அறியும் அறிவே