பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 145 மடமகள் என்பது இளமையும் மென்மையும் உடை யவள் என்றும் பொருள் கொள்வதற்குரியது. அப்பெரு மாட்டி மெல்லியள். அவள் இடை மிக மெல்லியது; மிக நுண்ணியது; அது கொடி போன்றது. அப்பிராட்டி யின் இடையில் எம்பெருமானுடைய திருக்கரம் வளைந்து தழுவி கிற்கிறது. காமவல்லி என்னும் கொடி கற்பக மரத்தைச் சுற்றிச் சூழ்ந்து தழுவிப் படரும். இங்கே கொடி போன்ற வள்ளியெம்பிராட்டியின் இடையைக் கற்பகம் போன்ற முருகன் கரம் தழுவுகிறது. கொடி மரத்தைச் சார்ந்து படர்வது இயற்கை. இங்கே கற்பகம் கொடியைச் சார்ந்து தன் மேல் படரச் செய்கிறது. முருகன் வலியச் சென்று வள்ளிநாயகியைத் தடுத்தாட் கொண்ட செயலேயே இது குறிக்கிறது. முருகன் திருக்கரம், வேண்டுவார் வேண்டியதை ஈவதாதலின் கற்பகத்துக்கு ஒப்பாக விளங்கு கிறது: இவ்வாறு முருகப்பெருமானுடைய ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் முறையே தான் தான் செய்யும் செயல்களை வழுவின்றிப் புரிகின்றது, அந்த முகங்களுக்கு ஏற்ப அவனுடை திருக்கரங்கள் தொழிற்படுகின்றனவாம். ஆங்கு அம் மூவிரு முகனும் முறைகவின்று ஒழுகலின். (அவ்வாறு அந்த ஆறு முகங்களும் தாம் செய்ய வேண்டிய செயல்களே முறையே பயின்று கடத்துவதால்தோள்கள் கிமிர்கின்றன, கைகள் செயல் புரிகின்றன என்று சொல்ல வருகிருர்.)