பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருமுருகாற்றுப்படை விளக்கம் வற்றினும் சிறந்ததாயிற்று. முருகன் வேலே விளங்கு கையானக இருக்கிருன். r வேல் விளங்கும் கையையும் அதற்கு இணையான திருக் கரத்தையும் சொல்ல வருகிருர் நக்கீரர். சிறந்த பொரு, ளுக்கு அடையே வேண்டியதில்லை. ஈசுவரன் என்ருல் எந்த ஈசுவரன் என்று கேட்கமாட்டார்கள். அது சிவபெரு, மானேக் குறிக்கும் திருநாமம். கோயில் என்று அடை யின்றிச் சொன்னல், எல்லாத் தலங்களிலும் சிறந்த சிதம் பரத்தைக் குறிக்கும். இயல்பாகவே பெருமையுடையவர். களுக்குச் சிறப்புப் பெயர்களேச் சேர்த்து அடையாளம் காட்டவேண்டும் என்பதில்லை. அவ்வாறே வேலைச் சொல்ல வந்த நக்கீரர் அதற்குச் சிறப்பாக அமையும்படி எந்த அடையையும் சேர்த்துச் சொல்லவில்லை. எஃகு என்று. மட்டும் சொல்கிருர். எஃகு என்பது வேலுக்கு ஒரு. பெயர். அது கூர்மையையும் குறிக்கும். வேல் கூரியதாதலின் அதற்கு அப்பெயர் வந்தது போலும்! வேலை ஞானசக்தி என்று கூறுவர். வேல் நீண்டு பின்பு இலைப்பகுதியில் அகன்று பிறகு கூர்மையாக முடிவது. அப்படியே அறிவும் நெடுகாட் பயிற்சியினல் அமைவதாக நீண்டு, பலவற்றைத் தெரிந்துகொள்வதால் அகன்று, இறுதியில் ஒன்றையே முடிந்த முடிபாகத் தெரிந்து கொள் வதால் கூரியதாக விளங்கும். ஆழ்ந்து அகன்று கூரிய அறிவு என்று சொல்வதிலிருந்து இந்த் இலக்கணங்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் வேலின் இயல்புக்கும் அறிவின் இயல்புக்கும் ஒப்புமை இருக் கின்றது. முருகன் தன் திருக்கரத்தில் வேலே வைத்துச் சுழற்றிக் கொண்டிருக்கிருன். அதற்கு இணையான கையில் கேடயத்தை வைத்திருக்கிருன். போர்செய்யப்