பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிருக்கரங்கள் 169 மோன முத்திரையையே மவுன ரட்சர மந்திரம்' என்று கூறுகிருர். அந்த முத்திரையின் பொருள் உணர்ந்த வர்கள் துரியாதீதமாகிய சுகாநுபூதியில் திளைப்பார்கள். தாரொடு பொலியும் இடக்கையைக் கூறும் முறை வருமாறு: 'வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேக சமூக ராக மதுபம் விழச்சிறு சண்பகம் செறிந்த தாரிற் பொலிந்தன.” 'இனம் இனமாகத் திரண்டு மொகு மொகு மொகு என்ற ஒலியோடு பலவாகிய சமூகத்தையுடைய :பண்களைப் பாடும் வண்டுகள் விரும்பி வந்து விழச் சிறிய சண்பக மலர் நெருங்கித் தொடுக்கப் பெற்ற மாலேயோடு விளங்குபவை” என்பது இதன் பொருள், கக்கீரர் தார் என்று மட்டும் சொல்ல, அருணே முனிவர் அதைச் சண்பக மாலையாக்கி அதில் வண்டுகள் விழுந்து இராகம் பாடுவதைக் கூறினர். - இந்த இரண்டு கைகளும் முருகனுடைய ஞானச் சிறப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. களவேள்வியை நடத்தும் கைகள் முருகன் பெருவீரம் உடையவன். அவனுடன் போர் செய்த குரபன்மன், புராணங்களிலும் இதிகாசங் களிலும் வரும் மற்ற அசுரர்களும் அரக்கர்களும் பெற்ற ஆற்றலே விடப் பேராற்றல் பெற்றவன். துணிவுக்கே உருவாகவும், வன்கண்மைக்கே வடிவாகவும், கொடுமைக்கே - கொள்கலனகவும் இருந்தவன் அவன். அவனே வென்று தேவர்களுக்கு கலம் செய்தவன் முருகன். மிகமிகச் சிறந்த விரம் படைத்த முருகன் முன் கின்று குரைேடு செய்த