பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 177 வச்சிரபாணியாம் இந்திரன் தந்த சிவந்த கையையுடைய தேவயானைக்குப் பொருந்தி இருந்தன என்பது இதன் பொருள். இவ்வாறு முருகன் தன் பன்னிரு கைகளாலே ஆறு முகங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற வகையில் கலம் செய்கிருன். - ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி. (அவ்வாறு அந்தப் பன்னிரண்டு திருக்கரங்களும் திரு முகங்களுக்கேற்ற பகுதியிலே அமையும்படி செயல்களேச் செய்தருளி.) திருச்சீரலைவாய்க்கு மு. ரு க ன் எழுந்தருளுகிமு ன். அப்போது ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உடைய திருக்கோலத்தில் அவன் காட்சி தருவதை இதுகாறும் நக்கீ ரர் சொன்னர். - முருகன் அலைவாய்க்கு எழுந்தருளுதல் முருகன் ஆறுமுகங்களோடும் பன்னிரண்டு திருக்கரங்க ளோடும் தன்னுடைய பிணிமுகம் என்னும் யானையின் மேல் ஏறிக்கொண்டு வருகிருன்; திருச்சீரலைவாய் என்னும் பெயரையுடைய திருச்செந்தூருக்கு வருகிருன். அவன் வான்வழியே எழுந்தருளுகிருன். சூரபன்மனேடு போர் செய்யும்பொருட்டுக் கந்தகிரியினின்றும் புறப்பட்டுப் பல தலங்களின் வழியே வந்து திருச்செந்தாரை அடைந்து அங்கே தங்கினன் என்று கந்தபுராணம் கூறுகிறது. முருகன் விசும்பின் வழியே எழுந்தருளும்போது அந்தர துந்துமிகள் முழங்குகின்றன. வேறு இசைக்கருவிகளும் ஒலிக்கின்றன. திரு-12