பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 185 இயலாது. அதன் முன்சக்கரங்களில் முட்டுக்கட்டை போட்டுத் திருப்பவேண்டும். வாழ்க்கைத் தேரைத் திருப்பு வதற்கும் அதன் முன்சக்கரங்களாகிய ஊண் உறக்கம் என்ப வற்றில் முட்டுக்கட்டை போடவேண்டும். அப்போது தேர் முழுவதும் திரும்பும், அதல்ைதான் விரதம் இருப்பவர்கள் உணவில் வரை யறையை மேற்கொள்கிருர்கள்; உணவு இல்லாமலே இருக்க முயலுகிருர்கள், உறக்கத்தைக் குறைத்துக் கொள்கிருர் கள்; உறங்காமல் இருக்க முயலுகிருர்கள். "தனித்திரு. பசித்திரு, விழித் திரு” என்பது தவத்துக்குரிய கிலேயைச் சொல்லும் உபதேசம். ஆகவே, தவம் புரிபவர்கள் உணவின்றிப் பல நாள் விரதம் இருக்கிருர்கள். அதனல் அவர்கள் உடம்பு இளேக் கிறது. சோற்றுக்கு இல்வாமல் பட்டினி கிடப்பவனுக்கும் உடம்பு இளேத்தாலும், அந்த உடம்பு ஒளியின்றி வாட்ட :மடையும். தவம் புரிபவர்களுக்கு உடம்பு மெலிந்தாலும் தவக்கனலின் ஒளி உடம்பில் தேசினை உண்டாக்கும். 'ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து’’ என்று மணிவாசகர் இந்த கிலேயைக் கூறுகிறர். இந்த முனிபுங்கவர்கள் ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி அவ்வொளி புறத்திலும் பொசியும்படி செய்கிற வர்கள். கன்பகல், பலவுடன் கழிந்த உண்டியர். (கல்ல காட்கள் பலவற்றில் ஒருங்கே உணவை உண்ணுது விட்டவர்கள்.1