பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 189 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று பெருமிதம் கொள்ளும் கிலேயை உடையவர்கள் அவர்கள். இன்பம், துன்பம் என்பன மனத்தில் உண்டாகும் அநுபவங்கள். விருப்பு வெறுப்புக்களால் இன்ப துன்பங்கள் உண்டாகின்றன. அவற்றை ஒழித்தவர்களை அவை சார்வதில்லை. அவ்விரண்டுக்கும் மேற்பட்ட அமைதியான ஆனந்தத்தில் அவர்கள் ஆழ்ந்து கிடப் பார்கள். உலகியலில் பொறிகளால் நுகரும் துன்பங்கள் உடனே துயரத்தை உண்டாக்குகின்றன; பொறி" இன்பமோ பின்பு வரும் துன்பத்துக்குக் காரண மாகின்றது. ஆகையால் பொறியினல் நுகரும் இன்பம் துன்பம் இரண்டும் ஒருவகையில் இடும்பைகளே. அவற் றிற்கு அப்பாலே சென்றவர்கள் உயிரினல் இன்பம் நுகர்வார்கள். பொறியின் வாயிலாக வரும் இன்பதுன்பம் மனத் தைச் சார்ந்தவை. பொறிகள் அடங்கி கின்ருலும் மனம் இன்பதுன்பத்தை வாசனையினல் நுகரும். துரங்கும் போது கனவில் இன்ப துன்பங்களே மனம் அநுப விக்கின்றது அல்லவா? ஜாக்கிரத்தில் மனம் பொறிக ளோடு இயைந்து இன்பதுன்பங்களை உணர்கிறது; கனவில் அவற்ருேடு சாராமல் நுகர்கிறது. இது தான் வேற்றுமை. மனம் தொழிற்படாத போது பொறி நுகர்ச்சி இராது. கன்ருகத் தூங்குகிறவனே எறும்பு கடித்தாலும் தெரிவதில்லை; கூப்பாடு போட்டாலும் அவன் காதில் விழுவதில்லை. பரிச இந்திரியமாகிய தோல் இருந்தாலும, ஒலிப் பொறியாகிய செவி இருந்தாலும் மனம் அவற்ருேடு சாரவில்லை; அதனல் உணர்வும் . இல்லை.