பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 191 .முருகனே நாடி வருகிரு.ர்கள். முருகனுக்குச் சிறிதே சினம் உண்டாகியிருக்கிறது. அதை ஆற்றி, தம்முடைய வேண்டு கோளைச் சமர்ப்பிக்க வருகிருர்கள் . தாமே கேரில் சென்று சொல்ல அவர்களுக்கு அச்ச மாக இருக்கிறது. முருகனுக்கு வேண்டியவர்களே முன் னிட்டுக்கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது. முருகனுக்கு மிகவும் வேண்டியவர்கள் பக்தர்கள் ஞானியர். அதனால்தான் இந்த முனிபுங்கவர்களே அழைத்துக் கொண்டு வந்திருக்கிருர்கள். தம் தம் தொழிலில் அவர்கள் சிறந்த தலைவர்களானலும், இங்கே முருகன் சங்கிதியில் தலைமை அன்பர்களுக்குத்தான். இந்த நுட்பம் தெரிந்து, இந்த முனிபுங்கவர்களேயே முன்னே போகச் சொல்லி ஆடல் பாடல் வல்லவர்களே அவர்களுக்கு பின்னே அனுப்பி, அந்தப் பெரியவர்கள் பணிவாகப் பின்னே வருகிருர்கள்: பிரமாவிடம் கோபம் கொண்டு சிறையில் அடைத் திருக்கிருன் முருகன். இப்போது தேவர்கள் வந்தால் அந்தக் கோபத்தை அவர்கள்மேலும் காட்டுவான். ஆகை .யால் கோபம் அடைந்த கணவனுக்கு முன் குழந்தையை விட்டு ஆறுதல் பெறச் செய்து. பின்பு செல்லும் மளேவியைப் போலத் தேவர்கள் முனியுங்கவர்களே அனுப்பி கயிருக்கிரு.ர்கள். அதனுல் அவர்கள் முன்னே புகுகிருர்கள். சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புளி புரையும் வால்கரை முடியினர், மாசற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர், கன்பகல் பலஉடன் கழிந்த உண்டியர், இகலொடு