பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 193 களிலும் வருகிறது. .ெ வ ள் 3ள ப் புகைபோலவும் இருக்கிறது. அவர்கள் மார்பில் மலர்மாலே விளங்குகிறது. இப்போது தான் மொட்டு மலர்ந்த மலர்களைக் கட்டிய் புத்தம் புதிய மாலே அது; அந்த மார்பில் அழகாகத் தொங்குகிறது. புகைமுகக் தன்ன மாசில் து உடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து. (புகையை முகந்தாற் போன்ற அழுக்கு இல்லாத துாய உடையையும், மொட்டுக்கள் வாய் அவிழ்ந்து மலர்ந்த மாலை சூழ விளங்கும் மார்பையும் (உடைய கந்தருவர்). முகை-மொட்டு. தகை-மாலே.) அவர்களுடைய உடையும் மாலேயும் தூய்மைக்கும் கலேப் பண்புக்கும் அடையாளமாக நிலவுகின்றன. அவர்கள் யாழை வாசிக்கிருர்கள். நரம்புகளே இறுகக் கட்டிய யாழ் அது. முறுக்கி இறுக்கிய நரம்புக் கட்டுத் தளர்ந்து போனல் அந்த அந்த கரம்பு அதற்குரிய சுரத்தைப் பேசாது. எப்படி அவை இறுக அமைய வேண்டுமோ, அப்படி அமைய வேண்டும். இப்படித் தந்திகள் கச்சிதமாக இறுக அமைந்த அமைப்பைத் திவவு என்று சொல்வார்கள். திவவு தளர்ந்து தொய்வு உண்டானல் பாட்டில் அபசுவரம் உண்டாகும். இசைவாணர்கள் இசை நிகழ்ச்சியைத் தொடங்கு வதற்கு முன் இந்தத் திவவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து ஒழுங்காக அமைத்துக் கொள்வார்சள் சுருதியோடு ஒட்டிப் பேசுகிறதோ என்று தம் காதை வாத்தியத்தின் அருகில் வைத்துப் பார்த்து ஒழுங்குபடுத்திக் கொள் வார்கள். நுட்பமான ஒலியும் தவறின்றி அமையவேண்டும் அல்லவா? அதல்ை இப்படிக் கூர்ந்து பார்த்துச் சுருதி சேர்க் திரு-13