பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் உலகம் முழுவதும் இயங்குவதற்கு உரிய வேலைகளைச் செய்ய சியமிக்கப் பெற்றவர்கள் இந்த முப்பத்து மூன்று தேவர்கள். முப்பத்து மூன்று மந்திரிகளையுடைய மந்திரி சபை போன்ற குழு இது. இந்தக் குழுவில் ஆளுக்கு ஒரு கருத்து இருந்தால் குழுவில் வேறுபாடு உண்டாகும்: ஆட்சி நன்கு நடைபெருது. எல்லோரும் ஒருமித்த மனப் பாங்குடன் இருந்தால்தான் கிர்வாகம் நன்கு சிகழும். இந்த முப்பத்து மூவரிடமும் அந்த ஒருமைப்பாடு இருக்கிற தாம். இது நச்சினர்க்கினியர் கருத்து. ஆதித்கர், ருத்திார். வசுக்கள், மருத்துவர் என்று நான்கு சிறு குழுக்களாக இருப்பதால், 'கால் வேறு இயற்கை' என்று சொன்னர். மொத்தத்தில் அவர்கள் பதினெரு மூவர்; முப்பத்து மூன்று பேர். பதினெண் கணம் திருமால் முதலிய மூன்று செல்வர்களேயும் அடுத்து, அவர்களின் கீழ் கின்று அதிகாரம் செலுத்தும் முப்பத்து மூவர் வருகின்றனர். அவர்களே அடுத்துக் தேவர்களும் மற்றவர்களும் வருகிருர்கள். அவர்கள் பதினெட்டுப் பிரிவாக உள்ளவர்கள். அவர்களைப் பதினெண் கணத்தினர் என்று சொல்வர். அவர்களும் உயர்ந்த கிலேயை உடைய வர்கள். ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெlஇயர். (பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்ற வர்களும்.) . பதினெண் கணங்களுக்கு வகை வெவ்வேருகக் கூறுவர். கச்சிஞர்க்கினியர் தேவர், அசுரர், தைத்தியர், கருடர் கின்னரர். கிம்புருடர், இயக்கர்.