பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் 225 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து. "மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தியையே செல்வமாகவுடைய என்பது பொருள். இதற்கு உரை எழுதிய கச்சினர்க்கினியர், "காற்சதுரமும் முச்சதுர மும் வில்வடிவுமாகிய மூன்று வகையைக் கருதின ஆகவனி யம், தக்கினக்கினி, காருகபத்தியம் என்னும் மூன்று தீயான் உண்டாகிய செல்வத்தினையுடைய என்று உரைத் தார். வேறு உரைகாரர் ஒருவர் மூன்ருவன: ஒன்று வேதத்தை வழங்கவும். ஒன்று தேவர்களுக்குத் தட்சினை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் இவ் வாருய முத்தி' என்று விளக்குகிருர், "அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ’’ 'ஒன்றுபுரிந் தடங்கிய இரு பிறப்பாளர் முத்தி' - (புறநானூறு, 2, 367) என்று வேறு சங்கப் புலவர்களும் இந்த முத்தியைப் பற்றிச் சொல்லியிருக்கிருர்கள். ', அந்தணர்களே இருபிறப்பாளர் என்பர். வடமொழி யில் த்விஜர் என்பர். பூணுால் புனேவதற்கு முன் ஒரு பிறப்பும், அதன்பின் வேறு பிறப்பும் உடையவரைப்போல இருத்தலின் இவ்வாறு கூறுவர். அவர்கள் முருகனை வழி படும் வேளையை அறிந்து வந்து துதிகளைக் கூறுகிருர்கள். இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல "உபநயனத்துக்கு முன் ஒன்றும் பின் ஒன்றுமாகிய இரு பிறப்பினையுடைய அவ்வந்தணர்கள் துதிக்க வேண்டிய பொழுதை அறிந்து தோத்திரங்களைக் கூற' என்பது இதன் பொருள். பொழுதறிந்து துவல' என்பதற்கு உதய திரு-15 - - - -