பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் 231 'யாவும்.அலை கொண்டுகைத்த காவிரிபுறம்பு சுற்றும் ஏரகம்அமர்ந்தபச்சை மயில்வீரா' என்னும் திருப்புகழ்ப் பகுதிகளில் இதைக் காணலாம். ஆகவே சோழநாட்டுச் சுவாமிமலையே திருவேரகம் என்பதில் ஐயம் இல்லை. ஏரகம் என்ற பெயர் வந்ததற்கு என்ன காரணம் என்பதை இங்கே ஆராய்வது பொருத்தமென்று எண்ணு கிறேன். அப்பர் சுவாமிகள் திருவாக்கில் ஏர் என்ற தலத்தின் பெயர் வருகிறது. தனிப்பதிகம் பெருத தலமாகையால் அது வைப்புத்தலங்களுள் ஒன்ருகக் கொள்வதற்குரியது. 'இடைமரு தீங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏர் இடவை எமப்பேரூர்' (rேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்) 'இரும்புதலார் இரும்பூளேயுள்ளார் ஏரார் இன்னம்பரார்’ (திருவீழிமிழலைத் திருத்தாண்டகம்) என்ற இடங்களில் அத் தலத்தின் பெயர் வருகிறது. கும்பகோணத்துக்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் ஏரகரம் என்றுள்ள ஊரே இந்த வைப்புத்தலம். இப்போது பேச்சு வழக்கில் எராரம், ஏராவரம் என்று வழங்குவர். அங்கே இரண் டு சிவாலயங்கள் உள்ளன. ஒன்று சிதைந்தி ருக்கிறது. அதிலுள்ள கல்வெட்டிலிருந்து அந்த ஊர். "இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடிச் சோழமங்கலம்' என்று வழங்கியதாகத் தெரியவருகிறது. ஆகவே அந்த ஊரே ஏர் என்ற வைப்புத்தலம் என்று உறுதியாகக்கொள்ள லாம். தஞ்சைக் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும்