பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:238 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகனுடைய வரவை எண்ணிக் குறவர்கள் ஒரே ஆனந்தத் தில் மிதக்கிருர்கள். அவனுக்கு உரிய தொண்டகப் பறையை அடித்து அவன் புகழைப் பாடிக் குரவைக் கூத்து ஆடுகிருர்கள். அப்போது முருகன் எழுந்தருளுகிருன். நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுக்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடு.அமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர. [நல்ல மணம் வீசும் சந்தனத்தை அணிந்த, சிறம் கிளர்ந்து தோன்றும் மார்பையும் கொடுமையான செயலையும் வலிய வில்லையும் உடைய கொலை செய்யும் வேடர்கள், உயர்ந்த மூங்கிற் குழாயில் பல நாள் இருந்து முற்றி விளேக் ததும் தேலைாயதுமாகிய கள்ளின் தெளிவை, மலையிலுள்ள சிற்றுார்களில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்ற சிறிய பறைக்கு ஏற்றபடி குன்றக் குரவையாகிய கூத்தை ஆட. . சாந்து-சக்தனம். கேழ்-நிறம். அகலம்-மார்பு. கொலை இய-கொலைபுரிகின்ற. கானவர்-வேடர். அமைமூங்கில். தேக்கள்.--தேனல் ஆன கள். தேறல்-தெளிவு. சிறுகுடி-குறிஞ்சி கிலத்து ஊர். கிளே-சுற்றம். தொண் டகம்-குறிஞ்சிநிலப்பறை, அயர-ஆட.) குறவர்கள் குரவைக் கூத்தாட, வேலன் கட்டிய கண்ணியை அணிந்துகொண்டு பல மகளிரோடு முருகன் எழுந்தருளுகிருன், அவன் வரும் அந்தக் கோலத்தை இனிச் சொல்கிருர் நக்கீரர். .