பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருமுருகாற்றுப்படை விளக்கம் லாம். இயல-பொருந்த, குரவைக் கூத்து நன்கு எடை பெற என்றும் பொருள் கொள்ளலாம். ஏந்தி-மகளிர் கையைத் தாங்கி. பிணே-பெணமான்; இங்கே ஆகு பெயராய்க் குரவைக் கூத்தாடும் மகளிரைக் குறித்தது, தழிஇ-தழுவி. தலைத்தந்து-தலைக் கையைத் தந்து.) "மென்ருேட் பல்பிணே இயல முழவுறழ் தடக்கையின் தழிஇ ஏந்தித் தலைத் தந்து' என்று கூட்டி, மெல்லிய தோளினேயுடைய பலவாகிய மான பிணை போலும் மகளிர் குரவை ஆடி அசைய, தன்னுடைய முழவையொத்த பெருமையையுடைய கையினலே அவர்கள் கையினத் தழe.இ எடுத்துக் கொண்டு முற்கை கொடுத்து' என்று உரை எழுது வர் கச்சினர்க்கினியர். "இவர்கள் மெய்திண்டி விளையாடுவதற்குரிய மகளிர்' என்று அவர் விளக்குவார். பல மகளிர் கையைக் கோத்துக் கொண்டு ஆடுவதைக் குரவைக்கூத்து என்பர். குறிஞ்சி கிலத்தில் ஆடுவதைக் குன்றக் குரவையென்றும். முல்லை நிலத்தில் ஆடுவதை ஆய்ச்சியர் குரவையென்றும் கூறுவர். ஆடலும் பாடலும் கந்தனுக்கும் கண்ணனுக்கும் மிகவும் உகந்தவை. ஆதலின் அவர்களைத் தெய்வமாக உடைய குறிஞ்சியிலும் முல்லே யிலும் குரவைக் கூத்தை மிகுதியாகக் காணலாம். சிலப்பதி காரத்தில் குன்றக் குரவையும், ஆய்ச்சியர் குரவையும் வரு கின்றன -

"குர்வை என்பது கூறுங் காலைச்

செய்தோர் செய்த காமமும் வென்றியும் எய்தக் கூறும் இயல்பிற் ருகும்' என்பது பழைய குத்திரம். குரவையாடுபவர்கள் காதலை யும் வீரத்தையும் பாராட்டிப் பாடுவார்கள் என்று இதல்ை தெரிகிறது.