பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ধতি றமகள் செய்யும் பூசை r 265 'ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை' (86) என்று நக்கீரர் தாம் இயற்றிய கெடுநல்வாடை என்ற நூலில் கதவுகிலேயைச் சொல் கிருர், ஐயவி என்பது வெள்ளைக் கடுகு. இங்கும் வாசம் கால்களிலும் மற்ற இடங்களிலும் தெய்வ சாந்தித்தியத்தின் டொருட்டு நெய்யையும் அரைத்த கடுகையும் அப்புகிருர்கள். அப்படி அப்பும்போது முருக ஆணுடைய திருநாமங்களேயும் மந்திரங்களையும் மெல்லச் சொல்கிருர்கள். பக்தியுடன் இந்தக் காரியத்தைச் செய் கிருர்கள். இவ்வாறு செய்யும் இடங்களுக்கெல்லாம் ஒரு கும்பிடு போடுகிருர்கள். அழகிய மலர்களேத் துரவு கிரு.ர்கள். இப்போதும் திருக்கோயில்களில் அங்கங்கே உள்ள பலிபீடங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சுவரில் உள்ள திருவுருவங்களுக்கும் ேேண் ணெய் தடவி அபிஷேகம் செய்து கும்பிட்டுப் பூசிக்கிருர்கள். அப்படியே மலே காட்டுக் கோயிலிலும் எங்கெங்கே கடவுள் உறைவதாக வழிவழியே கம்பி வருகிருர்களோ அங்கெல்லாம் இந்த செய்யும் ஐயவியும் .பூசிப் பூசிக்கிருர்கள். - இக்காலத்தில் சில தலங்களில் உள்ள மூர்த்திகளுக்கு ரோல் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு பூசுவார்கள். அதுபோல அந்தக் காலத்தில் சுவர்களிலும் தூண்களிலும் உள்ள உருவங்களுக்கு ஐயவியும் செய்யும் கலந்து பூசிப் பூத்துளவி வழிபடுவார்கள் என்று தோன்றுகிறது, இந்தக் கலவையினல் அந்த உருவங்களுக்குக் காற்ருலும் வெயி லாலும் மழையாலும் ஊறுபாடு நேராமல் இருக்கும் போலும்! கெய்யொடு ஐயவி அப்பி ஐதுஉரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி.