பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிருமுருகாற்றுப்படை 15 பழங்காலத்தில் தமிழ்நாட்டில் புலவர்களும், கலைஞர் களும் எப்போதும் பல ஊர்களுக்குச் சென்றுகொண்டே இருந்தார்கள். யார் யார் தம்முடைய கலேத்திறனைப் பாராட்டுவார்களோ அவர்களைத் தேடிச் சென்ருர்கள். தமக் கென்று ஓர் ஊர் இருந்தாலும் அவர்கள் எப்போதும் தமிழ் நாடு முழுவதும் உலவிக் கொண்டிருந்தார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உள்ளப் பாங்கு உடைய வர்கள் ஆதலின் எங்கே சென்ருலும் அவர்கள் பாராட்டப் பெற்ருர்கள்; தங்களிடத்திலுள்ள கலையினல் சிறப்பை அடைந்தார்கள். செல்வர் புலவர்களேப் பாதுகாத்தலும், கலைஞர்களுக்குப் பரிசு அளித்தலும் சிறப்புத் தரும் செயல்கள் என்று நம்பி இடைவிடாமல் அவ்வாறு செய்து வந்தனர். ஆகவே அந்தக் கலைஞர்கள் யாவரும் ஓரிடத்தில் தங்காமல் அங்கங்கே உள்ள செல்வர்களே காடிச் சென்று தங்கள் கலைத் திறத்தைக் காட்டிப் பரிசு பெற்று வாழ்க் தார்கள். இயல் தமிழில் வல்லவர்கள் புலவர்கள். இசைத் தமிழில் வல்லவர்கள் பொருநர், பாணர், விறலியர்கள். நாடகத் தமிழில் வல்லவர் கூத்தர். இவர்கள் யாவரும் எப்போதும் தமிழ் நாட்டில் உலவிக் கொண்டிருப்பார்க்ள். கலை நயம் தேரும் புரவலர்கள் எங்கே இருக்கிருர்கள் என்று காடியபடியே இருப்பார்கள். - பெரும்பாலும் இந்தக் கலைஞர்களும், புலவர்களும் தாம் பெற்ற பரிசில்களே உடனுக்குடன் செலவழித்து விடுவார்கள். நாளேக்கு வேண்டுமே என்ற கவலை இல்லாமல் கிடைத்த பொருளே அவ்வப்போது தாம் பயன்படுத்திக் கொள்வதோடு பிறருக்கும் தந்து விடுவார்கள். கற்ருேர் உலகத்தில் உலவுகின்ற அவர்களுக்கு உண்மை உலகத் தைப் பற்றிய கவலே இருப்பது இல்லே. ஆதலால் பாணர் களையும், புலவர்களையும், பிற கலைஞர்களையும் வறியவர்க