பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருமுருகாற்றுப்படை விளக்கம் இடங்களும் அடையாளம் இல்லாத இடங்களுமாக உள்ள தெ கைததலம் குன்று தோருடல். பிறகு காடு, கா, ஆறு, குளம் என்று வரிசையாக அடுக்கிக் கூறிய இடங்கள் அடை யாளமே இல் லாத இடங்கள். அடையாளம் சிறந்து கிற்கும் தலங்களே முன்னாக் கூறி, அடையாளம் உள்ளன வும் இல்லனவுமாகிய இடங்களே இடையிற் கூறி, அட்பால் அடையாளமே இல்லாத இடங்களே இறுதியிற் கூறினர், திட்பத்திலிருந்து திட்பமும் நுட்பமும் கலந்த நிலக்கும், இறுதியில் நுட்பமான கிலேக்கும் அழைத் துச் செல்லும் பாங்கில் இருக்கிறது இந்த முறை. ஆண்டவனேச் சகளமாகிய உருவத்திலே கண்டு வழிபட்டுப் பின்பு உருவமும் அருவமும் இணைந்த இலிங்க உருவிலே வழிபட்டுப் பின்பு அருவாகிய கிஷ்கள உருவத்திலே வழிபடும் முறையைப்போலவும் தோன்றுகின்றது. முருகன் எங்கும் பரவி இருக்கிருன். ஆனல் அவனே வழிபடும் இடங்களில் அவனுடைய அருள் சுரக்கிறது. நிலத்துக்கு அடியில் எங்கும் ர்ே இருக்கிறது. ஆயினும் கமக்குப் பயன்படுவதில்லை. நிலத்தை அகழ்ந்து கிணறு தோண்டினல் நீரைக் காண்கிருேம். முயற்சி இல்லாமல் எளிதில் நீரை அடைய முடியாது. எங்கும் நம் காலுக்குக் கீழே இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. இறைவன் சர்வ வியாபியாக இருப்பினும் வழிபடும் இடங்களில் வெளிப்படுகிருன். அன்புடன் உருகித் தியானித்து வணங் கில்ை வெளிப்படுகிருன். கம்முடைய உள்ளத்தில் அன்பு முதிர்வதற்குச் சில சூழ்நிலைகள் வேண்டியிருக்கின்றன, மடைப்பள்ளியைக் கண்டவுடன் உணவு கினேவு வருவது போலக் கோயிலைக் கண்டவுடன் யாவருக்கும் இறைவன் கினேவு