பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருமுருகாற்றுப்படை விளக்கம் - கந்தபுராணத்தில் இந்த வரிசையில் முருகன் திருவவதார வரலாறு வருகிறது. முருகனுடைய திருவவதாரத்தை எண்ணிய நக்கீரர். அதற்குமுன் நிகழ்ந்த இரண்டையும் உடன் கினைத்தார். அவை இறைவன் தென்முகக் கடவுளாக இருந்ததும் இறைவி மலைமகளாகத் தோன்றியதும். அந்த இரண்டையும் முருகைேடு தொடர்பு டடுத்துகின்ருர், "தட்சிணு. மூர்த்திக்குப் புதல்வனே, பார்வதியின் குமாரனே' என்று. ஆலின் அடியில் அமர்திருந்த கடவுள் தட்சிண மூர்த்தி. அவன் ஞானோபதேச மூர்த்தி. அவனுடைய ஞானக் கண்ணிலிருந்து குமாரன் அவதரித்தான். அதற்கு முன் அந்த ஞானக்கண் ஒளியிலே மாரன் ஒழிந்தான். மாரன் என்னும் இருள் அழியக் குமாரன் என்னும் சுடர் தோன்றியது: அது ஞானச்சுடர்; ஞான குரு மூர்த்தியாகிய ஆல்கெழு கடவுளின் புதல்வன். ஆல்கெழு கடவுட் புதல்வ! (கல்லால மரத்தின் அடியிலே எழுந்தருளிய தென் முகக் கடவுளாகிய சிவபெருமானுடைய புதல்வனே!) மலைமகள் மகன் தென்முகக் கடவுளின் புதல்வனகிய முருகன் ஆறு: சுடராகச் சென்று, சரவணப் பூம் பொய்கையில் விளையாடினன். ஆறு திருவுருவங்கொண்டு விளையாடல்: புரிந்தான். அவன் ஒருருவில் இணைந்து தேவர்களுக்கும் உலகினருக்கும் பயன்படவேண்டும், அருளே வடிவாகிய, சக்தியின் தொடர்பு இருந்தால்தான் உலகுக்குப் பயன்பட முடியும். ஆகவே சிவபெருமான் உமா தேவியாரை