பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் - 30E? யாருடைய உரையைக் கேட்டு அவன் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடுகிருனே அதுவே சிறந்த உரை என்று கொள்க' என்று அது கூறியது. அதுகேட்டு இறைவனே வணங்கி அரண்மனையை அடைந்தான் பாண்டியன். அப்பால் வணிகர் தெருவில் இருந்த உருத்திர ஜன் மனே அழைத்து வந்து உயர்ந்த பீடத்தில் ஏற்றிப் புலவர் களேயும் அழைத்து அவர்களுடைய உரைகளே வாசிக்கச் செய்தான். புலவர்கள் சிலர் வாசித்தபோது அந்தப் பிள்ளே அசையவே இல்லை; கோயில் விக்கிரகம் போல அமர்ந்திருக். தான். பாண்டியன் அதைக் கண்டு மனத்தில் கலக்கம் அடைந்தான். இந்தப் பிள்ளையோ ஊமை; இவன் இதைக் கேட்கிருனே. இல்லையோ? என்று ஐயுற்ருன். புலவர்கள் ஒருவர்பின் ஒருவராக உரையை வாசித்துக் கொண்டே போளுர்கள். மருதன் இளநாகனர் என்னும் புலவர் தம் உரையை வாசித்தபோது உருத்திர ஜன்மன் சிறிதே உடல் குலுங்கி முறுவல் பூத்தான். அப்போது பாண்டியனுக்கு நம்பிக்கை உண்டாயிற்று. கக்கீரர் தம் உரையைப் படித்த பொழுது அடுத்தடுத்துப் புளகம் போர்க்க மகிழ்ச்சியைப் புலப்படுத்தின்ை; அசைந்து ஆடின்ை. கடைசியில் அவர் உரையே சிறந்தது என்று யாவரும் முடிவு பண்ணிஞர்கள். அதுமுதல் இறையனரகப் பொருளுக்கு நக்கீரர் எழுதிய உரையே வழங்கி வரலாயிற்று. அவ்வுரையில், மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நாற்கு க்ரே னரால் உரை கண்டு, குமார சுவாமியாம் கேட்கப்பட்ட தென்க' என்று வருகிறது. நூல் இயற்றியவர் தந்தை. அவருடைய இதயம் கன்கு அறிந்தவன் அவருடைய திருமகன். ஆதலால் இந்த உரைதான் நூலுக்கு ஏற்புடையது என்பதை அறிந்து