பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 303 ஆதலால் அவனே, செருவில் ஒருவ! என்று பாராட்டச் சொல்கிருர் நக்கீரர். அவன் புகுந்த போரின் முடிவு வெற்றிதான், அவன் பேரைச் சொல்லிப் புகுந்தவருக்கே வெற்றி கிடைக்கும் என்ருல் அவன் வெற்றி பெறுவதில் என்ன வியப்பு இருக் கிறது? வெற்றி பெறுவதற்கு ஏற்ற வீரமும், பொரும் செயல் திறமையும், இளமையும் உடையவன் அவன். ஆகவே, பொருவிறல் மள்ள! என்று போற்றுவாயாக என்கிருர் நக்கீரர். செருவில் ஒருவ’ என்பதற்கு போரில் யாவரும் ஒப்பு இல்லாதபடி சிற்பவனே என்று பொருள். பொருவிறல் மள்ள' என்ப தற்கு. பொருகின்ற வெற்றியினையுடைய இளைய வீரனே' என்பது பொருள். மள்ளன் என்பது வீரமும் இளமையும் உடையவன் என்பதைக் குறிக்கும். பொருவிறல் மள்ள என்பதற்கு. "வீரராயிருப்பார்க்கு வீராயிருப்பவனே' என்று ஒரு பழைய உரையாசிரியர் பொருள் கூறுகிருர், 'பொருமறையார் கழல்வீரர் வீரன்' என்பது சிவஞான சித்தியாரில் உள்ள முருகக் கடவுள் வாழ்த்து, - அந்தணர் செல்வம் வேதமும் வேள்வியும் ஆகிய இரண்டையும் பாதுகாக் கும் கடப்பாடு உடையவர்கள் அந்தணுளர்கள். அவ்விரண் டையும் காப்பாற்றி வருவதல்ை யாவருமே கன்மை அடை