பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருமுருகாற்றுப்படை விளக்கம் வேலாயுதன் முருகனுடைய வீரத்தை வினைப்பூட்டும் பல திரு. காமங்களைச் சொன்ன நக்கீரர். அந்த வீரனுக்குரிய பேராயுதத்தை எண்ணுகிருர் முருகன் திருக்கரத்தில் வேற்படையை ஏந்தி யிருக்கிருன் படைக்கலங்கள் பல உண்டு. அவற்றில் வில், வாள், வேல் என்பவை: சிறந்தன. ஆயுதங்களில் அஸ்திரம். சஸ்திமம் என்று. இரண்டு வகை உண்டு. கையை விட்டுப் பிரயோகிக்கும். கருவிகள் அஸ்திரங்கள்; அம்பு போன்றவை. கையில் வைத்துக் கொண்டே தாக்குவன சஸ்திரங்கள்: தண்டம், உலக்கை போன்றன. வேல் அஸ்திரமாகவும் சஸ்திர மாகவும் பயன்படுவது. ஆதலால் அது வில், வாள். வேல் என்ற மூன்றில் சிறந்து கிற்கிறது. வெல் என்ப: திலிருந்து பிறந்தது வேல் என்ற சொல். வெல்வதற்கு, ஏற்ற கருவியாதலின் வேலாயிற்று. சிறந்த பெரு. விரளுகிய முருகன் படைக் கலங்களில் சிறந்த வேலை எந்தியிருக்கிருன். ஞான சக்தியையே அவன் வேலாக ஏந்தியிருக்கிருன். ஆதலால் ஞானசக்திதரன் என்ற திருநாமம் அவனுக்கு உண்டாயிற்று. சிறந்த வேற்படையை முருகன் தன் பெரிய கையில் எந்தியிருக்கிருன். அவன் புஜபல பராக்கிரமம், உடையவன். அதற்கு ஏற்ற படைக்கலமும் கிடைத்து விட்டது என்ருல் அவன் பெறும் வெற்றித் திருவுக்குக் கேட்க வேண்டுமா? வெற்றியே ஒரு செல்வம். அதனல் வரும் செல்வமும் பல பல. எந்தக் கையில்ை வேலெடுத்து வெற்றி பெற்ருனே. அந்தக் கையில்ை அவன் பிறருக்கு அச்செல்வத்தை ஈயவும் வல்லவன். வீரத்தால் வேலோச்சி வென்று பல செல் வத்தைக் கொண்டது அந்தக் கை; ஈரத்தால் பலருக்கு. வழங்கும் பெருமை பெற்றதும் அந்தக் கையே.