பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை - 19 புலவர்களுடைய பிள்ளைகளுக்கும் கிடைப்பது இல்லை. ஆனல் மதுரைக் கணக்காயனருக்குப் பிறந்த புதல்வ ராகிய நக்கீரர் சிறந்த புலவராக விளங்கினர். மதுரையில் இருந்த கடைச்சங்கத்தில் காற்பத்தொன்பது புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தனர் என்றும், அவரில் நக்கீரர் சிறந்தவராக இருந்தார் என்றும் தெரிய வருகிறது. நக்கீரர் என்ற சொல் இன்ன பொருளையுடையது என்று திட்டமாகத் தெரியவில்லை. கீர் என்பதற்குச் சொல் என்று பொருள். சிறப்பான சொல்லை உடையவர் என்று ஒருவாறு பொருள் கொள்ளலாம். 'ந' என்ற எழுத்து, சிறப்பைக் குறிப்பதற்கு வருவது. கப்பூதனர். கப்பாலத்தனர், கச்செள்ளையார், கத்தத்தனர் என்று உள்ள சங்க காலத்துப் பெயர்களில் சிறப்பைக் குறிக்கும் 'க' என்னும் எழுத்து இருப்பதைக் காண்கிருேம். ஆகவே, பல வகையில் சிறப்பை அடைந்த கீரர் என்று அந்தச் சொல்லுக்குப் பொருளைக்கொள்ளலாம். நக்கீரரைக் கீரர் என்றே வழங்குவதும் உண்டு. நக்கீரர் பத்துப்பாட்டிலுள்ள நெடுநல்வாடையையும் இயற்றியவர், அவர் இயற்றிய பல பாடல்கள் பிற சங்க நூல்களில் இருக்கின்றன. அவர் சங்கு அறுக்கும் அந்தணர் குலத்தில் பிறந்தவர் என்று சிலர் கூறுவர். வேதம் ஒத வராத அந்தணர்களே மாடு மேய்க்கவும், சங்கு அறுக்கவும் ஈடுபடுத்துவது பழைய வழக்கம். "வேளாப் பார்ப்பான் வாளரங் துமித்த வளை' என்று அகநானூற்றில் வருகிறது. வேள்வி செய்யாத அந்தணர்கள் அரத்தினலே வளே அறுப்பார்கள் என்பது அதல்ை தெரிய வருகிறது. வங்காளத்திலும் இப்படிச் சங்கு அறுக்கும் தொழிலில்