பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருமுருகாற்றுப்படை விளக்கம் அவனுடைய அழகைப்பற்றிச் சொல்லத் தொடங்கில்ை அது மிக மிக விரியும், அழகுக்கு உவமை சொல்லும் போது முருகனேச் சொல்வது புலவர் வழக்கம். 'கந்தனை யனையவர் கலைதெரி கழகம்’ என்பது கம்பர் வாக்கு. "என்றும் இளையாய் அழகியாய்' என்பது பழம் பாட்டு. முருகனுடைய பேரழகில் ஈடுபட்டு மயங்கிய சூரபன்மன் வியந்து பாராட்டுகிருன். ஆயிர கோடி காமர் அழகெலாம் திரண்டொன் ருகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணந் தன்னில் தூயநல் லெழிலுக் காற்ரு தென்றி.டின் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்’ என்று அவன் கூறுவதாகக் கந்தபுராணத்தில் காண்கிருேம். சடும் எடுப்பும் இல்லாத அவன் பேரழகைக் கண்டு பகை வனே மயங்கினன் எனின், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வும் வேண்டுமோ? ஆகவே, முருகன் இணையற்ற மணமும் ஈடற்ற அருளும் ஒப்பற்ற இளமையும் உவமையற்ற எழிலும் உடையவன் என்பது தெளிவாகிறது. இத்தனே முருகு களும் ஒன்று திரண்ட கோலமுடையவனதலின் முருகன் என்ற பெயருக்கு அவன் எவ்வாற்ருனும் பொருத்த முடையவகை விளங்குகிருன். இந்த நான்கும் மிகச் சிறந்து ஒருங்கே இணைந்த திருக்கோலம் வேறு இல்லை. அதனுல்தான் இவ்வளவு இலக்கணங்களும் பொருக்